
பாலியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சதாசிவம்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :332
பதிப்பு :1
Published on :2007
Out of StockAdd to Alert List
செக்ஸ் லைஃப் என்ற முதல் மாத இதழை 1973-ல் வெளியிடும்பொழுது அதில் என்னுடைய வாழ்த்தை வெளியிட விரும்பி ஆசிரியர் எல்.ஜி. ராஜ் என்னைச் சந்தித்தார். அப்பொழுதுதான் என் வாழ்த்தை மட்டும் வெளியிட்டால் போதாது. தொடர்ச்சியாக எழுத எனக்கு வாய்ப்புத் தர வேண்டும். மக்களுக்கு செக்ஸ் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்து வைக்க நான் விரும்புகிறேன். அதற்கேற்ப கேள்வி-பதில் பகுதியை ஆரம்பித்து தாருங்கள். என் முகவரிக்கு வாசகர் நேரடியாக கேள்வி எழுதும்படி செய்யுங்கள். டாக்டருக்கு நேரில் எழுதினால் தான் இரகசியம் வெளியாகும் என்ற பயமின்றி கேள்வி கேட்பார்கள். அந்த ஏற்பாட்டை விரைவில் செய்து தாருங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
