book

வரம் தரும் வல்லப கணபதி

₹32+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :167
பதிப்பு :1
Published on :1999
Out of Stock
Add to Alert List

 மகா வல்லப கணபதி ஆலயம்! நிச்சயம் இது உங்களுக்குப் பரிச்சயமான பெயராகத்தான் இருக்கும். ஏனென்றால் ஆற்றங்கரை, அரச மரத்தடி என எங்கெங்கும் இருக்கும் பிள்ளையார் வல்லப கணபதி என்ற பெயரில் இருக்கும் கோயில் கண்டிப்பாக ஒரு நூறாவது இருக்கும்! வல்லப கணபதி என்ற பெயர் பிள்ளையாருக்கு வரக்காரணம், ஒரு புராணக்கதை.

மரீசி முனிவரின் மகள் வல்லபை. அவள், கல்யாணம் செய்து கொண்டால் பிள்ளையாரைத்தான் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்தாள். பிள்ளையாரோ ஏற்கெனவே சித்தி, புத்தி என்று இருவரை திருமணம் செய்து கொண்டாகிவிட்டது. மூன்றாவதாக ஒருத்தி வேண்டாம் என்றார்.

அவ்வளவுதான் வல்லபைக்கு கோபம் பொங்கியது. பிள்ளையாருடன் சண்டைக்கே போகத் தயாராகிவிட்டாள். அவளை அமைதிப்படுத்த மரீசி முனிவர் சொன்னார்... ‘‘கோபப்படாதே... அறுகு அர்ச்சனை செய்து ஆனைமுகனை வழிபடு. நிச்சயம் பலன் கிடைக்கும்!’’ அப்படியே செய்தாள் வல்லபை. எப்படி வரம் தருவது என பிள்ளையார் யோசித்தபோது, ‘‘சித்தி, புத்தியோடு ஞானமும் உனக்கு உரியது விநாயகா! அந்த ஞானத்தின் வடிவமே வல்லபை... அவளையும் ஏற்றிடு...!’’ நாரதர் ஆலோசனை சொன்னார். வல்லபைக்கு வரம் தந்தார் பிள்ளையார். அவளைத் தன் மடிமீது அமர்த்திக்கொண்டு வல்லப விநாயகராக காட்சி தந்தார்.