book

பெண் தெய்வங்கள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமரர் கல்கி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Out of Stock
Add to Alert List

"தொட்டதெல்லாம் பொன்' என்கிற மாதிரியான கைராசி உண்டு பேராசிரியர் கல்கி அவர்களுக்கு. அவர் எழுதாத பொருளே இல்லை; கரம் பட்டுச் சிறக்காத கலையே இல்லை. கலைகளையும், கற்பனைகளையும் எழுதியது போலவே, வாழ்க்கை நெறிகளையும் எழுதினார். இன்றைக்குப் ‘பெண்ணுரிமை' என்று ஆரவாரமாக முழங்கிக்கொண்டிருக்கிற நிலையில், எழுபதாண்டு களுக்கு முன்னாலேயே இந்த எழுத்துலக மேதை அவர்களுடைய பிரச்னைகளைப் பற்றி சமூகப் பிரக்ஞையோடு எழுதினார். மிகவும் முக்கியமான ஒரு சமூகப் பிரச்னை என்ற போதிலும் கூட, அவருடைய எழுத்துடன் கூடவே பிறந்த நளினமான நகைச்சுவையும் கைகோர்த்து வரும்படி எழுதினார். அத்தகைய எட்டுக் கட்டுரைகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இத்தொகுப்புப் பணியில் எங்களுக்குத் துணை நின்று உதவுகிற கல்கியின் திருக்குமாரர் ராஜேந்திரனுக்கும், நூல் தொகுப்பாசிரியர் ‘சுப்ர. பாலனு'க்கும் எங்கள் நன்றி. மிகவும் பயனுள்ள இந்த நூலை வாசகர்கள் வரவேற்று மகிழ வாழ்த்துகிறேன்.