book

சுற்றுலாவியல் ஓர் அறிமுகம்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. ஈஸ்வரன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :151
பதிப்பு :1
Published on :2010
Add to Cart


உலகச் சுற்றுலாக் கழகம் கீழ்க்கண்டவர்களைச் சுற்றுலாப் பயணிகள் என்று பாகுபாடு செய்துள்ளது. ஒரு நாட்டில் குறைந்தது 24 மணிநேரமாவது பயணம் செய்பவர் சுற்றுலாப் பயணி எனப்படுவார். அவருடைய நோக்கங்களை இரண்டு வகைப்படுத்தலாம். 1.ஓய்வு, இன்பப்பொழுதுபோக்கு, விடுமுறையைச் செலவு செய்யச்செல்லல், உடல் நலத்திற்காகச் செல்லல், மத சம்பந்தமாகச் செல்லல், விளையாட்டுப் போட்டி களுக்காகச் செல்லல்,2. வாணிகம், குடும்பம் குறிப்பிட்ட குறிக்கோள் கருதிச் செல்லல், கருத்தரங்கு, மாநாடுகளில் கலந்து கொள்ளச் செல்லல். 24 மணி நேரத்திற்கும் குறைவாகத் தங்குபவர்கள் இன்பப் பயணம் செய்பவர் என்று அழைக்கப்படுவர்.
சுற்றுலாப் பயணி ஒரு பார்வையாளர் ஆவார். அவர் மனமகிழ்ச்சி, இன்பப் பொழுதுபோக்கு என்னும் குறிக்கோள்களுடன் 24 மணி நேரமும் அதற்கு மேலும் தம்முடைய வீட்டை விட்டுப் பிற இடங்களில் பயணம் செய்வார். "சுற்றுப்பயணம் மேற்கொள்பவரைச் சுற்றுலாப் பயணி எனலாம். அவர் மனமகிழ்ச்சிக்காகவும், இன்பப் பொழுதுபோக்கிற்காகவும், மனநிறைவிற்காகவும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடம் போன்ற பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவார். 1. தம் விருப்பப்படியே பயணம் செய்தல், 2. இன்பத்தைச் தேடிச் செல்லல், 3. பயணம் முடிந்ததும் சொந்த வீட்டிற்கு அல்லது ஊருக்குத் திரும்பி வருதல் என்னும் மூன்று தன்மைகள் அவரிடம் மேலோங்கியிருக்கும்.