ஐம்பெருங்காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கமலா முருகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :124
பதிப்பு :6
Published on :2018
Add to Cartகுண்டலகேசி என்னும் வணிகப்பெண் வணிக மரபினனும், களவுத் தொழிலை மேற்கொண்டவனுமான காளன் என்பவனைக் காதலித்து மணம்புரிந்து கொண்டாள். ஊடற் காலத்தில் கணவனைக் கள்வன் என இகழ்ந்தாள். சினம் கொண்ட கணவன் அவளைக் கொல்லக் கருதி, ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான்.காளனின் வஞ்சகத்தை உணர்ந்த குண்டலகேசி ஒரு சூழ்ச்சி செய்தாள். இறுதியாக அவனை ஒருமுறை வலம்வந்து வணங்க விழைவதாகக் கூறினாள். அவனும் அனுமதி அளித்தான். கணவனைச் சுற்றி வலம் வந்தபோது மலை உச்சியிலிருந்து அவனைக் கீழே தள்ளிக் கொன்று விடுகிறாள்.
வாழ்க்கையின் வெறுப்புற்ற குண்டலகேசி, உஞ்சை மாநகர் சென்று அருகச் சந்திரன் என்னும் பௌத்தத் துறவியுடம் அருள் உபதேசம் பெற்றுப் புத்தரின் பெருமைகளை அறவுரைகளை எங்கும் பரவ வகை செய்தாள்.