book

அன்புள்ள அறிவியல்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராபர்ட் ஹர்ஸ்க்ஃபெல்ட்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :41
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123425108
Out of Stock
Add to Alert List

               அறிவியல் என்பதற்குச் செய்து பார்த்து அறிந்து கொள்வது என்ற கருத்து உண்டு.  ஆனால் இன்று வகுப்பறையில் சோதனைகளைச் செய்யும்போது சோதனைக் குறிப்புப் புத்தகத்தில் விளக்கப்பட்டவாறு சிறிது கூட பிறழாமல் செய்து முடிக்கின்றனர்.  அதற்கான வாய்ப்பை நடுநிலைப்பள்ளியிலும் மாணவர்களுக்குக் கொடுப்பதில்லை.  வகுப்பில் பாடங்களை நடத்தும்போது மாணவர்கள் ஆர்வம் காரணமாக சில சோதனைகளில் ஈடுபட முற்படும்போது மாணவர்களுக்கு வாய்ப்பும் நேரமும் கிடைப்பதில்லை.

                சிந்திக்கின்ற ஒவ்வொரு மாணவனுக்கும் அறிவியலில் நாட்டமுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் வகுப்பறையில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கல்வி எத்துணையும் நன்மை அளிக்காது.  இது போன்ற பிள்ளைகளின் இயற்கை ஆர்வத்தை வளர்க்கும் பொருட்டும், பிற சோதனைகள் செய்வதற்கும் அறிவியற் கழகம் தோற்றுவிக்கப்பட வேண்டும். அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் அறிவியல் அறிவை வளர்த்து கொள்வதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் தங்களது வீட்டியிலேயே சில எளிய சோதனைக் கருவிகளைக் கொண்டு அறிவியல் ஆய்வகத்தை அமைத்து கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்