book

வியர்வையின் வெகுமதி

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

வியர்வைக்கு வெகுமதி’ என்ற நூலின் தலைப்பே உழைப்பின் உயர்வை உணர்த்துவதாக உள்ளது. நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சமுதாயத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஓய்வின்றி தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். எழுதியவைகளை நூலாக்கி விடுகின்றார். படிக்கும் வாசகர்கள் மனதை செம்மைப்படுத்தி நெறிப்படுத்தி விடுகிறார். பாராட்டுக்கள்.

நூலில் 30 முத்தான தலைப்புகள், 30 கட்டுரைகள் உள்ளன. தலைப்புகளே சிந்திக்க வைக்கின்றன. ‘வியர்வைக்கு விழா’ என்று தொடங்கி ‘உழைப்பு வீணாகாது’ என்று முடித்துள்ளார். நூல் முழுவதும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. உழைப்பின் உயர்வை உணர்த்தி உள்ளார். கடின உழைப்பிற்கு ஈடு, இணை இல்லை என்பார்கள். சொல்லை விட செயல் முக்கியம் என்பார்கள். நூலிலிருந்து சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு :