அந்த கிராமத்துக் குழந்தையை எனக்குத் தெரியும். இந்தப் பிள்ளைக்கு இசை
தெரிந்து அளவு சமூக சாதுர்யம் தெரியாது. அந்த சாதுர்யம் தனக்கு இல்லை, என்ற
விமர்சனத்திற்கு அஞ்சி வேடிக்கை மனிதர்கூட்டத்தில் சேராமல் கர்வமாய்
தவழ்கிறது. சத்தியமாய் இந்தக் குழந்தைக்கு வியாபாரம் தெரியாது. ஆனால்
கறாரான வியாபாரி போல் நடிக்கும். நடிப்பில் என்னளவு தேர்ச்சி இல்லாததால்
குட்டு வெளிப்பட்டு குழம்பும். நான் இசைக் கலைஞனாக இருந்திருந்தால்
இளையரஜவாக இருக்க ஆசைபட்டிருப்பேன். அதே போல் இளையராஜா நடிப்புக் கலைஞனாக
இருந்திருந்தால் என்னைப் போல இருக்கவே ஆசைபட்டிருப்பர் என்று நம்புகிறேன்.