வெண்பாப் புலியென விளங்கும் அஃதிவர் புலமைக் கோல்முன் பொறுப்புடன் அடங்கி எலியாய்ப் பூனையாய் இருப்பதை அறிந்தேன்.தரமான படைப்பு நிரந்தரமானது. திருவள்ளுவர் பற்றித் தெரிந்துகொள்ளத் திருக்குறளைவிடச் சிறந்த சாதனம் வேறு இருக்க முடியுமா ? இசைஞானி இளையராஜா அவர்களை இதுவரை நான் நேரில் பார்த்ததில்லை மனத்தை அறிய அவர்தம் படைப்பே போதும்.