
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Kurai Theerkum Koyilkal
Free shipping over ₹500
நாமஜபம், அர்ச்சனை, ஆரத்தி, அபிஷேகம், பூஜை
புனஸ்காரம், பிரதட்சணம், யாத்திரை, உபவாசம், உற்சவம்... இப்படி பரமனைப்
பக்தி செய்ய எண்ணற்ற வழிகள் உள்ளன. இவற்றில் எந்தச் செயலையுமே செய்யாமல்,
நிச்சிந்தையாய் அவனை மட்டும் நினைந்து உருகுவதும்கூட ஒரு வகை பக்திதான்
அல்லவா?
அப்படி, சிவனாரை அன்றி வேறு எதையுமே நினையாத
ஓர் எளிய அடியாருக்காக, சிவனே உமையவள் சகிதம் வந்து காட்சி தந்து, சாட்சி
சொன்ன அதிசயம் நடந்த ஊர்தான் அவளிவ நல்லூர் (அவள் இவள் நல்லூர்).
ஊர் சிறியதுதான். ஆனால், தன்னகத்தே கொண்ட
பல்வேறு சிறப்புகளால் பெரும்பேர் பெற்றுத் திகழ்கிறது. இறைவனே வந்து சாட்சி
சொன்ன ஊர் என்பதால் இதை `சாட்சிநாதபுரம்' என்றும், `பனையாத்தாள்’ என்ற
சக்திமிகுந்த கிராம தேவதையின் கோயில் இருப்பதால், ‘பனை பழுத்த நல்லூர்’
என்றும்கூட வேறு இரு பெயர்கள் இவ்வூருக்கு இருக்கின்றன.