
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள்
விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன. சகல தேவர்களையும்
மகிழ்விக்கும் பொருட்டு அன்றைய தினம் வேத பாராயணங்களும், ஹோமங்களும்
நடைபெறுகின்றன. உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த
பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும். நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற
சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும்
12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சுழற்சியின்
அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு
அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம்
போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். மிகவும் புனிதமான நாள்
அன்றுதான், சம்பந்தப்பட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும்
ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ்த்த வேண்டும்.