மறைக்க முடியாதபடி ஊற்று நீராய் வெளிப்படுகிறது என் நோய். இதை உண்டாக்கிய
அவரிடம் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. காமமும் வெட்கமுட் காவடிக்
தண்டுபோல் இருந்து என்னை வேதனை அடையச் செய்கிறது. காமக்கடல் நீந்திட ஏதுவான
கப்பல் இல்லை. நட்பாய் இருக்கும் பொழுதே வராத அவர் வெறுத்தால் என்ன
செய்வாரோ. கடல் அளவு இன்பம் தரும் காமமே தடை உண்டானால் கடலைவிட துன்பம்
தருகிறது. காமக் கடல் நீந்த முடியாமல் நள்ளிரவிலும் நான் தவிக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் ஓய்வு தந்த இரவு என்னை துணையாக விழுத்திருக்கச் செய்தது.
கொடியவர்கள் செய்யும் கொடுமைவிட துணை இல்லா இந்த இரவு கொடுமையானது. உள்ளம்
போல் நினைக்கும் இடம் எல்லாம் சொல்ல முடியும் என்றால் வேதனையான கண்ணீரில்
மிதக்காது என் கண்.