வயதான பிறகு உங்களது பெண் உறுப்பு மற்றும் பெண்ணின் கருவாய் என்ற உறுப்பு
எப்படி இருக்கும்? அதற்கு என்னவெல்லாம் பிரச்சனை வரும் ? என்று பலருக்கும்
சந்தேகங்கள் எழும். அதை எவ்வாறு பராமரிக்க வேண்டும் வயதாக வயதாக அதில் வேறு
ஏதேனும் கோளாறுகள் அல்லது பிரச்சனைகள் ஏற்படுமா? அதில் ஏதும் வியாதிகள்
ஏற்படுமா? என்று பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழும்.பலரும் தங்கள்
உறுப்புகளை பாதுகாக்க பலவிதமான பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை உபயோகம்
செய்கிறார்கள். அதை சுத்தமாக வைத்துக்கொள்ள பல பொருட்கள் கடைகளில்
கிடைக்கிறது. அதை வைத்துக் கொள்கிறார்கள். பலரும் தங்களது பெண் உறுப்பு
சரியான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பல விஷயங்களில்
ஈடுபடுகின்றனர். பலவித பயிற்சிகளும், பல விதமான பொருட்களும் உபயோகம்
செய்கிறார்கள். ஆனால் ஒரே மாதிரியான பெண் பெண் உறுப்பு என்பது எங்குமே
கிடையாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தோற்றத்தில் இருக்கக் கூடியதாக
இருக்கிறது.