பூக்களுக்குப் பல நிறங்கள் உள்ளன. அதுபோல, காதலுக்கும் நிறம் உண்டு. பச்சை, சிவப்பு, கறுப்பு என்று பல நிறங்கள். அதில் இரண்டு நிறங்களை இந்தக் காதலில் எடுத்துக் காட்டியிருக்கிறேன். காதல் என்ற பெயரில் கன்னிப் பெண்கள் ஏமாந்து விடக்கூடாது என்று இந்த நாவல் எச்சரிக்கிறது!இந்த ஏப்ரல் மாதம் எகிப்துக்குப் போய் வந்தேன். அந்தப் பயணத்தைப் பின்னணியாகக் கொண்டு, இந்த நாவலைப் பின்னியிருக்கிறேன். கதை கெய்ரோவில் தொடங்கி சென்னையில் முடிகிறது. இந்நாவலை எழுத முழு முதல் காரணமாக அமைந்ததுடன் இந்த நாவலை அச்சிட்டு வெளியிடும் பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி உரித்தாகும்.