கனவு காணுங்கள். கற்பனை பண்ணுங்கள். திட்டமிடுங்கள். செயற்படுத்துங்கள். முன் வைத்த காலைப் பின் வைக்காமல், தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விடா முயற்சி நிச்சயம் வெற்றி தரும்! நம்பிக்கைதான் மனிதனின் தும்பிக்கை. நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நம்பிக்கை இருந்தால் இமயத்தைக் கூட அசைத்து விடலாம். நம்பிக்கையுடன் செய்கையும் முக்கியம். இந்த இரண்டு "கை”யும் இணையும்போது எந்தச் செயலையும் வெற்றியுடன் செய்து முடிக்க முடியும். எடிசன் ஆயிரம் முறை தோல்வி அடைந்தார். அதன் தான் மின்சார பல்பை கண்டு பிடித்தார். எனவே, தோல்வி ஏற்பட்டால் துவண்டு விடாதீர்கள். முயற்சியைக் கைவிட்டு விடாதீர்கள். தொடர்ந்து பயணம் செய்யுங்கள். உங்கள் இலட்சியத்தை எட்டுவது உறுதி. இந்தக் கருத்துக்களின் கோவைதான் இந்தப் பெருங்கதை. பூவில் தேன் எடுத்து, அந்தத் தேனில் கருத்துக் களை குழைத்துக் கொடுத்திருக்கிறேன். காதல் தான் அந்தத் தேன்!