நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிறது. ஏற்கனவே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வந்து விட்டது அந்தவகையில் நமது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான ஒரு நல்ல விழிப்புணர்வு கட்டுரை இது.கொஞ்சம் பெரிய கட்டுரையாக இருந்தாலும் கட்டாயமாக முழுவதுமாக படித்து பயன் பெற வாழ்த்துக்கள்.
‘+1 ல் எந்த குரூப் எடுக்கலாம்? ‘+2 விற்குப் பிறகு எந்த படிப்பில் சேரலாம்? என்ற கேள்வி எல்லா மனங்களிலும் நிறைந்திருக்கும்.பொறியாளராக வேண்டும் என்ற கனவுள்ள பையன் பெற்றோரின் விருப்பத்திற்காக மருத்துவம் படித்து வேறு வழியின்றி ஒரு நாள் மருத்துவனாகவும் ஆகின்றான். ஆனால் ஒரு நாளும் சிறந்த மருத்துவனாக விளங்குவது என்பது கொஞ்சம் சிரமம்.தன் விருப்பத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் பெற்றோர் விருப்பத்தையும் நிறைவேற்றாமல் கடைசியில் எதுவாகவும் விளங்காமல் போனவர்கள் கதையும் பல உண்டு.
‘குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காக ஒரு துறையை தேர்ந்தெடுத்து தருவது பெற்றோர்களின் கடமை இல்லையா? இதை கூட செய்யக்கூடாது என்றால் எப்படி?’ என்று கேட்கலாம்.