சகமாற்றுத்திறன் படைப்பாளிகளோடு இணைந்து கவிஞர் ஏகலைவன் உருவாக்கிய தமிழின் முதல் மாற்றுத்திறன் கவிதைகள் தொகுப்பு "கவிச்சிதறல்". இந்த நூலினை சேலம் வாசகன் பதிப்பகம் வெளியிட்டது. இந்த "கவிச்சிதறல்" நூலுக்கு சமீ்பத்தில் 18.9.2010 அன்று மணவை செந்தமிழ் அறக்கட்டளை 2009.ன் சிறந்த கவிதை நூலுக்கான சிறப்பு பரிசு வழங்கி கெளரவித்தது. கவிஞர் தமிழ் மணவாளன் தேர்வுக்குழு தலைவராக இயங்கி தேர்ந்தெடுத்த இந்நூலுக்கான சிறப்பு பரிசை தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் தலைவியான கவிஞர் சல்மா அவர்களுடன் செந்ந்தமிழ் அறக்கட்டளை தலைவர் செளமா ராஜரத்தினம் அவர்களும் முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரனார்முன்னிலையில் வழங்கி மாற்றுத்திறானாளிகளின் படைப்புலக்கிய பதிவை ஏற்படுத்திய கவிஞர் ஏகலைவனை பாராட்டினர்.