உச்சம் தொடு என்ற தன்னம்பிக்கை தரும் நூல். இது மனித வளத்தில் ஏற்படுகிற அபரீதமான உணர்வுகளை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்ற சிறப்பாகும்.
மனித வாழ்க்கை உணர்வுகளை சார்ந்தது. அது பல கனவுகளையும், கற்பனை நயங்களையும் உள்ளார்ந்த விசயமாக கருதப்பட்டு உயரிய நோக்கத்தை அடையக் கூடிய சூழ்நிலைகளையும் பின் பக்குவங்களையும் உருவாக்கிக் கொள்கிற வாய்ப்புக்கள் மனித வளத்திற்கு உண்டு.
ஒவ்வொரு தனி மனித சமூதாயத்திற்கு தன்னிச்சையான முடிவு எடுக்கக்கூடிய சௌபாக்கியம் கிடைப்பது என்பது அவரவர் எண்ணங்களை பொறுத்தும் அதனை சார்ந்து செயல்படுகின்ற செயல்பாட்டுக்களை பொறுத்தும் அமையும்.
ஆகவே நோக்கம் வைத்து உயரிய இலக்கை அடைய வெற்றி தேவையாகிறது என்பதனை வலியுறுத்தவே வெற்றிக்கான உச்சம் உன்னிடத்தில் உள்ளது. வேறு யாரிடத்திலும் இல்லை என்பதனை நிலை நிறுத்தி காட்டிடவே இந்நூல் படைக்கப்பட்டது என்பதனை உங்களின் பேராதரவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.