'ஒரு கூடை ஒரு கோடிப்பூக்கள்' - என் இதயக் கூடையிலிருந்து உங்களுக்கு அள்ளித் தருகின்றேன். இத்தொகுதியிலுள்ள கவிதைகள் நறுமணமிக்கவை. காலெமல்லாம் மலர்ந்திருப்பதற்கு வரம் வாங்கி வந்தவை; வரங்களாக வாய்த்தவை. ஒவ்வொரு கவிதையும் உங்கள் மனதைக் கவரும் என்பது என் நம்பிக்கை. கவிதை என்பது ஒரு ஆன்ம தரிசனம். அது ஒரு சுகமான அனுபவம். நான் என்னுள் எழுகின்ற எண்ணங்களையெல்லாம் எழுதுகின்றேன். காண்பனவற்றையெல்லாம் கவிதைகளாகவே காண்கின்றேன். அவகைகளையே படைக்கின்றேன். தேவையானவைகளை எடுத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு- தியாரூ.