தமிழகத்தில் தமிழ்க் கவிதைகள் புனையப்டுவதைப் போல வெவ்வேறு மாநிலங்களில் வாழும் கவிஞர்களும் தத்தம் தாய்மொழிக்கவிதைகளைச் சிறப்பாகப் புனைந்து நூல்களாகவும் வெளியிட்டுப் புகழ்பெற்றுள்ளனர். அத்தகையோர் இயற்றியுள்ள மணியான கவிதைகளைத் திரட்டி மொழியாக்கம் செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டும் என்ற நோக்கோடு ஆர்வத்தின் உந்துதலால் , ஊக்கமிகுதியால் அரிய உழைப்பை மேற்கொண்டு, எழுத்துலகில் தனி இடம் பிடித்த கோவைக் கவிஞர் புவியரசு அவர்கள் இந்நூலைத் தொகுத்துள்ளார்.