மூச்சுக் காற்றைப் போன்று. தமிழை உட்பிடித்து அதைக் கவிமலர்களாகப் பிரசவிக்கும் கவிஞர் தியாரூவின் படைப்புலகத்தில் மலர்ந்த மற்றுமோர் அனுபவம்தான்.
'கைகளுக்குள் வைகறை வானம்." கண்களில் கவிதைகள் தோன்றுவதுண்டு. ஆனால் கண்களையே கவிதையாக மாற்றிச் செல்லும் உணர்வை விதைக்கும் படைப்புதான் இக்கவிதைத் தொகுப்பு: கவிஞர் தியாரூவின் கவிதைகள் வெறும் சொற்களின் கோர்வையன்று.
அவை மானுடத்தின் மீது தீரா நேசிப்பினைச் செலுத்தும் கவிஞனின் ஆன்மப்பாடல், தற்காலக் கவிதைப் போக்கிலிருந்து விலகி, காத்திரமான வழியொன்றைச் சமைத்திட எத்தனிக்கும் தொனியைக் கவிஞர் தியாரூவின் படைப்புகள் அடர்த்தியாகப் பேசுகின்றன. கைகளுக்குள் வைகறை வானத்தில் நிறைந்திருக்கின்றன சிதம்பர இரகசியமும், செந்தமிழுக்கான எதிர்காலச் சேதிகளும்!
முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்