இந்திய சுதந்திர வரலாற்றில் வாழ்வாங்கு வையத்துள் வாழ்ந்த தமிழர் தம் பங்களிப்பு தலையாயதும் தவிர்க்க முடியாததுமாக உள்ளது. இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிர் ஈந்த தியாகிகளை இங்கே நாம் நினைவு கூர்வோம்.ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மைசூர் புலி திப்பு சுல்தானின் போராட்டத்தை விடுதலைப்போரும் துவக்கம் என்றே கூறலாம். 1857இல் ஜான்சி ராணியின் போராட்டத்திற்கு போராட்டத்திற்கு முன்னரே 1824இல் கிட்டூர் ராணி சென்னம்மாள் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடினார். அவருக்கும் கால் நூற்றாண்டுக்கும் முன்னதாகவே திருவிதாங்கூரைச் சேர்ந்த வேலுத்தம்பி, கொச்சியைச் சேர்ந்த பாலியத்தச்சன், மலபாரைச் சேர்ந்த பழசி ராஜா ஆகியோரின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. வேலுத்தம்பியின் போராட்டம் 1806ஆம் ஆண்டில் நடந்தது.