அரச குடும்பத்தினர் எல்லோரும் அரண்மனை நிலா முற்றத்தில் விருந்துக்குப் போயிருப்பதாகச் சொன்னார்களே, இலக்குவன் தேவி மட்டும் அங்கே போகாமல், ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறாள் என்ற திகைப்புடன் அவளை நிமிர்ந்து நோக்கி, ஊர்மிளா ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய் முழுநிலவின் அழகில் லயித்திருக்கிறாயா என்று சிரித்தபடி எதிரே நின்றான் அயோத்தி மன்னன்.