உலகத் தமிழர் கலைக்களஞ்சியம் என்பது தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும்.
வரலாறு
உலகத் தமிழ் ஓசை என்ற மாத இதழை நடத்திவந்த பேராசிரியர் சி. எஸ். எஸ். சோமசுந்தரனார் தன் வாழ்நாள் இலட்சியமாக உலகத் தமிழர் கலைக்களஞ்சியத்தை வெளியிடுவதைக் கொண்டிருந்தார். நூல் வெளிவரும் முன்பே சோமசுந்தரனார் இறந்துவிட்டார். இந்நிலையில் அவரால் பணிப்பிக்கபட்ட இ. கோ. தி. சிவகுமாரைப் பதிப்பாளராக கொண்டு இக்களலைக்களஞ்சியம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இதுவே தமிழில் தனிமனிதரால் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியமாக இருக்கலாம் எனப்படுகிறது.
உள்ளடக்கம்
இந்தக் களஞ்சியத்தில் முதன்மையாக தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், நாட்டுத் தலைவர்கள் குறித்த சுருக்கமான வரலாறு போன்றவை தொகுக்கபட்டுள்ளன. மேலும் தமிழர் இசைவிழா, தமிழர் வணிகம், தமிழர் நம்பிக்கைகள், பசுபிக் கடலில் தமிழ்க் குடியரசு போன்ற தலைப்புகளில் தகவல்களைத் தந்துள்ளார்.[1]