ஈராயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய திருக்குறள் காலம்தோறும் சுவடியில் வளர்த்து 1812 ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அச்சு தூலில் மலர்ந்தது. தமிழில் வருவதற்கு முன்னரே மேலைநாட்டு அறிஞர் பெருமக்கள் திருக்குறளின் மேன்மையையும் சிறப்பையும் உணர்ந்து தக்க உணர்ந்து தத்தம் மொழிகளில் மொழிபெயர்த்தனர். 1730-இல் வீரமாமுனிவர் லத்தின் மொழியில் இரு இரு பால்களை மொழிபெயர்த்தார். கிரேக்க மொழியில் திருக்குறளின் சில பகுதிகளை மொழிபெயர்த்ததாகக் கூறுவர். (G. இலக்குமணப் பிள்ளை) பிரஞ்சு மொழியில் 1747-இல் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பெற்றது. 1794-இல் கிண்டர்ஸ்லி என்பவர் பிரஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்தார்.
பிரெஞ்சு நாட்டறிஞர் ஏரியல் திருக்குறளை மனித சிந்தனையின் மனித சிந்தனையின் தூய வெளிப்பாடு என்று போற்றினார். அறிஞர் டாக்டர் ஜி.யு. போப் மன்பதைப் பாவலர் (Bard of Universal Man) என்று போற்றினார். ஜெர்மானிய அறிஞர் ஆல்பர்ட் சுவைட்சர் உலக இலக்கியங்களில் உயர்ந்த மெய்யறிவு. திருக்குறளைப் போல எந்த நூலிலும் போற்றப்படவில்லை என்பார்; திருக்குறளின் சிறப்பை Indian thoughts and Development என்னும் நூலில் புலப்படுத்துவார்.
ஜெர்மானிய அறிஞர் டாக்டர் கார்ல் கிரால் பொருள் ஆழத்தையும் மொழி நடையையும் கண்டு வியந்தார். தன் உள்ளம் சுவர்ந்த நூல் திருக்குறள் என்பார் அறிஞர் கோபன் ஹவர் (ஜெர்மனி). அறிஞர் இங்கர்சால், அறிவைப் போற்றும் அரிய நூல் திருக்குறள் என்பார். குஷ்யப் பேரறிஞர் லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தில் திருக்குறளின் சிறப்பை எடுத்துரைப்பார். பின்னர் அண்ணல் காந்தியடிகள் இந்தக் கடிதத்தை ஆங்கில முன்னுரையுடன் வெளியிட்டார். தனது தாய்மொழியிலும் மொழி பெயர்த்தார். அறிஞர் பெர்னாட்ஷா வள்ளுவரின் புலால் மறுத்தல் கொள்கையைப் பாராட்டி மகிழ்வார். உலகத்தில் உள்ள அறிஞர்கள். ஞாளிகள், சமூக ஆர்வலர் எனப் பலரும் போற்றி வரும் சூழலில் திருக்குறள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும்.
இந்த மொழிபெயர்ப்புத் திட்ட அறிஞர்கள் குழு "உலக மொழிகளில் திருக்குறள்" என்னும் தொகுப்பை பெரு முயற்சி எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் மட்டும் 125-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. நூற்றுக்கணக்கான நூல்கள் பிறமொழிகளில் உள்ளன. இவற்றை தொகுப்பது எளிமையன்று. கடும் உழைப்பு, பொறுமை, புலமை ஆர்வம் இருந்தால்தான் இவற்றைச் செய்ய முடியும். உரிய தரவுகளுடன் இவற்றை தொகுத்துள்ளனர்