முனைவர்.கி. முப்பால்மணி தலைசிறந்த ஆய்வாளர்களில் ஒருவர். குறிப்பாகத் தமிழக மெய்யியல் சிந்தனை மரபுகளில் ஆழ்ந்த ஆராய்ச்சித் தடம் பதித்தவர். மேலைநாட்டு, இந்திய நாட்டுச் சிந்தனைகளின் முரண்பாடுகள், சமூகமாற்றங்கள் பற்றி ஆராய்வதில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர், அறிந்திராத பல நூல்களைத் தேடிக் கண்டு ஆய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்வதில் ஆர்வம் மிக்கவர்.தமிழகத்தில் சங்க காலம், பக்திக்காலம், காலனி ஆதிக்கக் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி நிலைகளை, போக்குகளைக்குறிப்பாகத் தத்துவத் துறையில் புதிய பக்கங்களைக் காட்டுகிறார்.