சங்ககாலம் பற்றிய ஆய்வுகளில் க.கைஆசபதி, கா.சிவத்தம்பி,நா. வானமாமலை ஆகியோரின் நூல்களுக்குப் பிறகு,சங்ககாலச் சமுதாயம் ' ஒரு முக்கியமான நூலாக விளங்குகின்றது. இந்நூல்எ ஏராளமான சாஆன்றுகள் அடிப்படையில் ஒருங்கிணைந்த முறையியலுடன் சங்ககால சமூக அமைப்பு உருவாக்கத்தை எளிமையாகவும்,தெளிவாகவும் எடித்துரைக்கின்றது . மக்களிடையே வழங்கும் வாழ்மொழி வழக்காறுகளும், வழிபாட்டுமுறைகளும் வரலாற்று வரைவிற்கான சான்றுகளாக அமையும் தகுதியுடையன என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. வரலாற்றின் மற்றொரு பகுதியை இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது