சித்தர்கள்
என்றாலே சித்துகள் செய்பவர்கள் என்றுதான் அறியப்பட்டிருக்கிறது. ஆம்;
சித்துகள் பலவும் செய்தார்கள்; அதே சமயம் மக்கள் நல்வாழ்வுக்காகவும் பல
சாதனைகள் செய்தார்கள் என்பதும் உண்மையே. அப்படிப்பட்ட சித்தர்களை நாம்
இன்னும் மறந்து விடவில்லை. அவர்களை நினைவில் வைத்துக் போற்றிக் கொண்டுதான்
வருகிறோம். பரகாயப் பிரவேசம் செய்தல், கண்டம் விட்டு கண்டம் செல்லுதல்,
உருமாறுதல், தொலை நோக்கு போன்ற அதி அற்புதங்களைச் செய்தவர்களும் உண்டு;
ஜீவன் முக்தர்களாக இன்னும் நம் கண்களுக்குப் புலப்படாமல் வாழ்ந்து
கொண்டிருப்பவர்களும் உண்டு. அவர்களைத் தொடர்ந்து சமகாலத்தில் பல
அற்புதங்களைச் செய்து ஜீவன் முக்தர்களாக இருந்து கொண்டு நம் வாழ்வோடு
கலந்து, நம்மை நல்வழிப்படுத்தும் அநேக சித்தர்கள் நம்மால் அறியப்படாமலேயே
இருந்து வருகிறார்கள். அவர்களை, அவ்வாறான சித்தர்களைப் பற்றியெல்லாம்
விவரிப்பதுதான் இந் நூல். படிக்கப் படிக்க, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களை
உணர உணர நீங்கள் மலைத்துப் போய்விடுவீர்கள் என்பது உண்மையே. இது 650
பக்கங்கள் கொண்ட, அட்டை பைண்டிங் செய்யப்பட்ட தரமான புத்தகம்.