சித்தர் கைகண்ட மருந்து எனும் இத்தொகுப்பில் சித்தர்கள் கையாண்ட மருத்துவக் குறிப்புகளின் அடிப்படையில் இந்நூலை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். மருத்துவம் அறியாதவர்களும் தங்களுக்கு அவ்வப்போது உண்டாகும் சிறு பிணிகளை நீக்கிக்கொள்ளும் விதத்தில் அனுபவபூர்வமாக மருத்துவ முறைகள் விளக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 29 வியாதிகளுக்கான வைத்தியக் குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவ நூல் இதுவென்பதில் சற்றும் மிகையில்லை; முற்றிலும் உண்மை. மருத்துவம் அறியாதவர்களும், தங்களுக்கு அவ்வப் போது உண்டாகும் சிறு பிணிகளை நீக்கிக் கொள்ளும் வகையில் இச்சிறு புத்தகத்தில் எளிய முறைகளாக அமைக்கப்பட்டுள்ளன. பலமுறைகள் ஆசிரியர் அனுபவித்து பலன் கண்டவை.