கம்பராமாயணத்தைப் பற்றித் தமிழில் இதுவரை வந்துள்ள நூல்களில் அருமை நண்பர் திரு.க. வீரையன் எம்.ஏ. அவர்கள் எழுதிய 'கம்பனும் பக்தி இயக்கமும்' என்னும் இந்நூல் தனிவகையும், தனிச்சிறப்பும் உடையதாகும். தமிழ்க் கவிதையின் அழகுகள் அனைத்தும் ஒன்றுதிரண்டுள்ள கம்பனது இராமகாதையைப்பற்றி யார் வேண்டுமானாலும் ஒரு நூலை எழுதிவிடலாம். ஆனால் அவனைச் சமூக விஞ்ஞானப் பார்வையோடு நோக்கி, நுணுகி ஆராய்ந்து எழுதுவது ஓர் அரிய முயற்சியாகும்.