அனைவருக்கும் வணக்கம்...
இருள் ஒன்று இன்று ஒளியைப் பற்றிப் பேசப் போகின்றது.
"ஆம்"
அறியாமை என்பது இருள் என்றால், அதற்குள் இருக்கும் நாமெல்லாம் இருளுக்குள் இருப்பவர்கள் தானே! இந்த இருளிலிருந்து அந்த ஒளிக்கு போவதைப பற்றி பேசுவது, செயல்படுவதற்குதான் தியானம் என்கிறோம்.
உங்களைப் பற்றி நீங்கள் என்றாவது உங்களிடம் பேசியது உண்டா?
காலையில் பத்திரிகையில் படிப்பது கூட மற்றவர்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ளத்தானே அன்றி என்றாவது உங்களைப் பற்றி அதில் வரவேண்டும் என்று நினைத்துண்டா?
நீங்கள் இன்று கண்ணாடி முன் நின்று தியானம் செய்யப் போகின்றீர்கள்.
"ஆம்
உங்களைப்பற்றி உங்களிடம் நீங்களே பேசப் போகின்றீர்கள். புரியவில்லையா?
அதுதான் தியானம்.
- சுவாமி ராகவேந்திரா தீர்த்த ஹரி