அன்புக்குரியவர்களே!
இருளும், ஒளியும் இணைந்தால் விஞ்சுவது இருளா?
இருள்தான் எங்கும் உள்ளது. ஒளியென்பது வந்து செல்வது. இங்கு குரு ஒளியென்றால், சீடன் இருளாகிறான். இவை இரண்டும் இணையும் வேளையில் உண்டாகும் மின் அதிர்வுதான் உரையாடல் என்ற 'சத்சங்கம்'
இங்கு இருளுக்கும் ஒளிக்கும் நடந்த உரையாடலை தொகுத்தளித்திருக்கிறோம்.
நீங்கள் இருளாக இருந்தால் ஒளியுடன் கலக்கின்றீர்கள். ஒளியாக இருப்பீர்களேயானால் உங்கள் பயணம் சூன்யத்திலிருந்து சுத்த சைதன்யத்தை நோக்கி பயணிக்கிறது.
இந்த பயணத்தல் இருவருக்கும் நடந்த உரையாடலின் தொகுப்புத்தான் இந்நூல்.