‘ஓம் நமோ நாராயணா' என்று அணுநேரமும் திருமாலின் திருமந்திரத்தை உச்சரிக்கும் நாரதர், சிவபெருமானை வழிபட்ட தலம் இது. ஒரு முறை திருமாலின் கையில் இருந்த திருச்சக்கரம் செயலிழந்து விட்டது. ஆதலால் ஜலந்தாரன் என்ற அசுரனை வதம் செய்ய சக்கரம் வேண்டி ஈசனை வழிபட்டார் திருமால். தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு வழிபட்ட திருமாலுக்கு, ஒருநாள் ஆயிரம் மலர்களில் ஒன்று குறைந்தது. எனவே தனது வலது கண்ணை, தாமரையாக பாவித்து ஈசனுக்கு அர்ச்சித்தார். இதையடுத்து அவருக்கு சிவபெருமான் சுதர்சன சக்கரத்தை வழங்கினார்.