இந்த ஞானபூமியில் வாழ்ந்த மஹான்கள் வழிவந்த நான், அவர்களின் ஆசியைப் பெற்றும், என் முன்னோர்களின் பாதம் தொட்டும் வணங்கி இந்நூலினை எழுதியுள்ளேன். ஓரெழுத்து மந்திரம்ஓம், ஈரெழுத்து மந்திரம் ராமா, மூன்றெழுத்து மந்திரம் முருகா. இப்படி பட்டியல் நீள்கிறதே. ஒரே பொதுவான மந்திரம் இல்லையா இது தான் கேள்வி. எல்லா இனத்தவருக்கும் ஒரே மந்திரமாக நம் முன்னோர்கள் கொடுத்து 'காயத்ரி' எனும் மந்திரம் என்றேன். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1975 -ல் பிறந்த சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி அவர்கள் சென்னையில் ' கிட்டி வெல் சில்ரன்ஸ் அகாடமி' என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் எழைக்குழந்தைகளுக்கு, குறிப்பாக வழி தவறிய சிறுவர்களுக்கு நமது கலாச்சாரம், ஆன்மிகம், யோகாசனம், தியானம் ஆகியவற்றைப் போதிக்கிறார்.
- சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி.