சங்கம் மருவிய காலத்தில் படைக்கப்பட்ட அற இலக்கியங்களில் சமண சமயத்தின் கருத்துகள் மிகுதியாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. எனினும் அச்சமயத்தின் நெறி முறைகளையும் கட்டுப்பாடுகளையும் வாழ்வியல் முறைகளையும் முழுமையான நிலையில் எடுத்துக்கூறும் சிறப்புடையதாகத் திகழ்வது 12ஆம் நூற்றாண்டில் சமண முனிவர்களால் படைத்து அளிக்கப்பெற்ற அருங்கலச் செப்பு என்னும் சமயம் சார்ந்த நீதி நூலாகும்.