இன்றைய இளைஞர்கள் பாஸ்ட் புட் வாங்கி உண்கிறார்கள். அல்லது பாஸ்ட்டாகச் சமைக்க உதவும் ரெடி குக் அயிட்டங்களை வாங்கி துரித கதியில்சமைக்கிறார்கள்.
இதே பொருட்களை நாமே விடுமுறை தினங்களில், சீசன் சமையங்களில் செய்து வைத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம், சிக்கனம் இரண்டையும் கடைப்பிடிக்கலாம்.
எவ்வளவு வசதி இருந்தாலும் செட்டி நாட்டுப் பெண்கள் பேரம் பேசி பொருள் வாங்கி வருடத் தேவைக்கு அவற்றைத்தயார் செய்து வைப்பதில் வல்லவரகள். இதிலிருந்தே அவர்களின் தொலைநோக்குப் பார்வை அவசரத் தேவைகளை சமாளிக்கும் சமயோசிதப் புத்தி முதலியன புலப்படும்.
அவர்கள் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வரும் தயாரிப்பு முறைகளை எனக்குத் தெரிந்த எளிய முறையில் சிறு குறிப்புகளாத் தந்துள்ளேன்.
இதில் உள்ள அளவுகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றில்லை. அவளுகளைச் சுருக்கிக் கொஞ்சமாகச் செய்து நன்றாக வந்தால் மறுமுறை அதிகத்திற்கு முயற்சிக்கலாம்.
- உமா சொக்கலிங்கம்.