வாய் ருசிக்கு என்னதான் விலைக்கு நொறுக்குத்தீனி வாங்கித் தின்றாலும் ஒரு நல்ல நாள், பண்டிகை என்று வரும் போது
சுத்தபத்தமாக நாமே பக்தியுடன் செய்து பகவானுக்குப் படைக்கும் போது ஏற்படும் மனநிறைவே தனிதான். எல்லாம் சரிதான் யாருக்கு செய்யத் தெரியும்? மேலும் எந்தப் பண்டிகைக்கு என்ன பலகாரம் செய்வது. சலிப்பது கேட்கிறது சகோதரிகளே பண்டிகைகளைப் பக்தியுடனும் பரவசத்துடனும் கொண்டாட ஒரு வாய்ப்பு. ஏற்கெனவே வெளிவந்த எனது நூல்களுக்கு வாசகியர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்நூலும் வாசகியரின் வரவேற்பைப் பெறும். எனது முந்தைய நூல்களைப் போலவே இந்நூலையும் கற்பகம் புத்தகாலயம் சிறப்பாக வெளியிட்டுள்ளது.
- உமா சொக்கலிங்கம்.