காஞ்சிபுரம் மாவட்டம் வடமங்கலத்தைச் சேர்ந்தவர் இந்நூலின் ஆசிரியர் சி.ச. மகிமைராஜ். இவர் தனது பதினாறாம் வயதில் ஆரம்பித்து இருபது வருடங்களாக இந்த போர் போடும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இதுவரை சுமார் 5000 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ள இவர் நீர்வளம் பற்றிய பல நுட்பங்களை இவரின் தந்தை சவரிமுத்துவிடம் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
இவர் அமைத்துக்கொடுத்த ஆழ்துளைக் கிணறுகள் இன்று வரை தங்கு தடையின்றி செயல்பட்டு தண்ணீரை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
இத்தொழிலில் பல புதிய உத்திகளைக் கண்டுபிடித்து வேலை நேரத்தை வெகுவாக்க் குறைத்து சீக்கிரமே முடித்துக்கொடுத்து நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளார்.
பல்வேறு வகையான ஆழ்துறைகளை அமைக்கவும், ஆழ்துளைக்கிணறுகள் அமைத்தல் பற்றியும் இந்நூலில் விரிவாகவும், அதே சமயத்தில் ஆழமாகவும் விவரித்திருக்கிறார். நிச்சயம் வாசக்களுக்கு பயனுள்ள நூலாக இருக்கும் என நம்புகிறோம்.
இது ஒரு கற்பகம் புத்தகாலயம் வெளியீடு