வால்களின் அத்தனை பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம், அதில் இழையோடும் நகைச்சுவை. இது கிச்சுகிச்சு மூட்டுகிற நகைச்சுவை அல்ல. உரக்கச் சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் அல்ல. ஆனால் படிக்கிற போதெல்லாம், படித்து முடிக்கிற போதெல்லாம் எண்ணி எண்ணி நமக்குள் நாமே புன்னகை செய்து கொள்ளத் தவறமாட்டோம்.