வணக்கத்துக்குரிய காதலியே
குனிந்து டிரஸ்ஸை அள்ளி எடுத்தவள் உணர்ச்சி வசப்பட்டாள். நெற்றி வியர்த்தது. உடல் நடுங்க ஆரம்பித்தது.
விமானம்... ஓசையுடன் பறக்கிறது... ஆண்கள்.... பெண்களுக்கு நடுவிலே.... சிரிப்புடன் உபசரிக்கும் ஏர்ஹோஸ்டஸ்களின் பின்னால்... சாய்ந்தவாறு கண் களை மூடிக் கொண்டிருக்கிறான் செந்தில் அத்தான்... விமானம்... ஓசையுடன் பறந்த விமானம்... காற்றைத் துளைத்து மேகங்களில் புகுந்து புறப்பட்ட விமானம்... புகையை கரும்புகையைக் கக்கி வானத்திலே கறுப்புக் கோடு போடுகிறது. பிறகு... படீரென்ற பெரிய வெளிச்சத்துடன் வெடித்தது. சிதறுகிறது...
ஸூட் நழுவி விழ... இரண்டு கைகளாலும் கன்னத்தைத் தாங்கி வீறிட்டு அலறிய சாந்தியின் அலறல்.... கெட்டி மேளச் சத்தத்தில் அமுங்கிப் போயிற்று.
***********************
பைரவன் அழைகின்றேன்.
"வசந்த மண்டபமும் நீராழி மண்டபமும் கட்டி முடித்துவிட்டால் இந்த உல்லாச கிரகம் அநேகமாய் தயாரான மாதிரிதான். ரொம்ம்ம்ம்பவும் சிரமப்பட்டு ராஜராஜசோழ காலத்துச் சுவடிகளைத் தேடி எடுத்து வந்திருக்கிறேன். இதிலுள்ள வர்ணனைகளை கம்ப்யூட்டரில் ஃபீட் பண்ணு. சில மணி நேரத்துக்குள் மண்டபங்களின் பிளான் தயாராகி விட வேண்டும்." பேசிக் கொண்டிருந்தவரின் கண்ணில்பட்டான் அவன்.
பாதாள அறைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தான்.
"நிறுத்துங்கள்!” அலறினார்.
"அவனை உடனே நிறுத்துங்கள். அவன் பாதாளக் குகைப் பக்கமாகப் போகக் கூடாது. அந்த வாசலை மிதித்தால்..." நான்கு பேர் அந்த ஆளை நோக்கி ஒட... இவரது உதவியாளர் கேட்டார்: “மிதித்தால்...?"
புரொபசர் பைரவனின் முகம் இறுகியது. மூச்சுத் திணறினார்: “மரணம்... உடனே மரணம் சம்பவிக்கும்.'