முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகை செல்வன்,
சென்னையில் குடியிருந்தாலும் வாரந்தோறும் மதுரைக்கு வருபவர். வாய்ப்புக்
கிடைத்தால் பேரையூர் பக்கம் இருக்கும் சொந்த ஊரான சிலைமலைப்பட்டிக்குச்
செல்லும் அவர், மதுரையில் இருந்தால் காலேஜ் ஹவுஸை எட்டிப்பார்க்கத்
தவறுவதில்லை. மதுரையின் லேண்ட் மார்க்குகளில் ஒன்றாக அறியப்படும் ‘நியூ
காலேஜ் ஹவுஸ்சின்’ பெயர்க்காரணம், (பழைய) மதுரை கல்லூரி ரயில் நிலையம்
அருகே இருந்தபோது அதன் மாணவர் விடுதியாக இருந்த கட்டிடம் இது என்பதே.