book

நவீன அரபுலகக் கவிதைகள்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க.மு.அ. அஹ்மது ஜீபைர்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788177359503
குறிச்சொற்கள் :அரபு நாடுகள், கற்பனை, சிந்தனை, கனவு, பழங்கதைகள், அரபி மொழி
Add to Cart

அரபி மொழி என்பது நூறு மில்லியனுக்கும் அதிகமான அரபு மக்களால் பேசப்படும் ஒரு மொழியாக இன்று விளங்குகிறது. இருபதுக்கும் மேற்பட்ட அரபு நாடுகள், மேற்கிலே வட ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கிலே ஓமன் வரையும், வடக்கிலே சிரியாவிலிருந்து தெற்கே சூடான் வரையும்,வடக்கிலே சிரியாவிலிருந்து தெற்கே சூடான் வரையும் விரிந்துள்ளன. அவற்றில் வளைகுடா நாடுகளும் அடக்கம். அவ்வரபி மக்களின் இலக்கியம். அதன் வடிவங்கள் இன்று உலக மக்களால் போற்றப்படுகிறது. அரபி மொழி, செமிடிக் மொழிகளிலே ஒரு சிறந்த செம்மொழியாய், நம் தமிழைப்போல் இன்று சிறப்புற்று விளங்குகிறது. அம்மொழியின் இலக்கியங்களை நம் தமிழ் கூறும் உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம், என் நெஞ்சில் நீறுப்பூத்த நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது, அதன் விளைவே உங்கள் கரங்களில் தவழும் ''நவீன அரபுலகக் கவிதைகள்'' என்ற இந்நூல்.