சோழர் வரலாறு
Solar Varalaru
₹237.5₹250 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.மா. இராசமாணிக்கனார்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :272
பதிப்பு :2
Published on :2018
Add to Cart பல காலம் கடந்தும், இன்றும், படித்தறியத்தக்க நூல்கள் பல உண்டு. டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறும் அத்தகைய ஒரு நூல். தமிழக வரலாறு முழுமையாக இதுவரை எழுதப்படவில்லை. ஆயினும், இந்நூல் தமிழக வரலாற்றை அறிய மிகவும் உதவும்.பண்டைத் தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகளின் துணைக் கொண்டு ஆராய்ந்து 1937ல் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியாரின் முன்னுரையோடு இந்நூல் வெளிவந்ததாகும். தமிழ் படிப்பவர்களுக்கு (புலவர் வகுப்பு) பாடநூலாக இருக்கும் தகுதி மிக்கது. முற்காலச் சோழர்கள், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள் என்று பாகுபடுத்தக் கூடிய வகையில் மூன்று பாகங்களாக நூல் பிரிக்கப்பட்டுள்ளது.கரிகால் பெருவளத்தான் முதல் தொடங்கி இராசராச சோழன் இடைப்பட, மூன்றாம் இராசேந்திரன் இறுதியாக சோழ மன்னர்களின் ஆட்சிமுறை, நாட்டு நிலை, கலைகளின் சிறப்பு, புலவர்களின் மேன்மை அனைத்தும் புலப்பட நூல் எழுதப்பட்டுள்ளது. புலமையுடையோர்க்கும் ஆய்வு அறிஞர்க்கும் பயன் மிகவுடைய நூல்.