book

பெண்களுக்குரிய கை கால் மருதாணி மாதிரிகள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2015
Add to Cart

கல்யாணக் காலங்கள் வந்தாலோ, விசேட காலங்கள் வந்தாலோ பெண்களுக்கு உற்சாகம் அதிகமாகிவிடும். ஒருவரையொருவர் முந்திக்கொண்டு தங்களை அழகுபடுத்திக்கொள்ள முனைவார்கள். கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நிறைய ஆபரணங்களை அணிவதோடு நிற்காமல், கைவிரல்களையும், கால் பாதங்களையும்கூட அழகுபடுத்தத் தொடங்குவார்கள். கை விரல்களிலும், கால் பாதங்களிலும் விதவிதமான வடிவங்களில் மருதாணி இட்டுக் கொள்வார்கள். என்னதான் ‘நெயில் பாலிஷ்' வந்து விட்டாலும் துணிகளின் நிறங்களுக்கு ஏற்பவும், உடம்பின் நிறத்திற்கு ஏற்பவும் ஏகப்பட்ட நிறங்களில் அவை கிடைத்தாலும், மருதாணி மருதாணிதான். அது நம் பண்பாட்டோடு ஒன்றிவிட்ட ஒன்று. காலங்காலமாய் அது பெண்களை அழகுபடுத்தி வந்திருக்கிறது. அழகுக்காக மட்டுமல்லாமல், இது மருத்துவ ரீதியாகவும் உடலுக்குப் பயன்தரத்தக்கது. பெண்கள் இதை நன்கு உணர்ந்தே உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.
தோல், மனம், ஆகிய இரண்டையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் தன்மை உடையது மருதாணி. சுகமான தூக்கத்திற்குப் பழங்காலத்தில் தலையணை நிறைய மருதாணிப் பூக்களை நிரப்பி வைத்துப் படுத்துக் கொண்டார்கள். இந்த மருதாணி, உடல் நலத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை என்று பண்டைய நூல்கள் விளக்குகின்றன.