ஜெய் சிவாஜி (மராட்டிய சிவாஜியின் புகழ்பாடும் வீர காவியம்)
₹699
எழுத்தாளர் :குலோத்துங்கன்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :752
பதிப்பு :2
Published on :2021
Add to Cartசத்ரபதி சிவாஜி உருவாக்கி வைத்த இந்து சுயராஜ்ய உணர்வு இன்று வரை மராட்டியத்தின் இந்துத்துவ அரசியலின் அடிப்படை. அதை உணர மராட்டிய இதயப் பகுதியின் பல மாதம் பயணம் செய்து எழுதப்பட்ட வரலாற்றுப் பயண நூல்.புத்தகங்களை மட்டும் படித்துச் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையைச் சொல்லாமல், அவர் வாழ்ந்த இடங்களில் பயணம் செய்து அந்த மண்ணின் மணத்தோடு சிவாஜியின் வரலாற்றைச் சொல்வது சுவையாக இருக்கும் என்று முடிவெடுத்தேன்.
அந்த வகையில் இது ஒரு வரலாற்றுப் பயண நூல். தமிழில் ஒரு வேறுபட்ட முயற்சி.
ஷிவாபா என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிவாஜி எழுப்பிய மாபெரும் கோட்டைகளில் பயணம் செய்தபோது ஒரு யுக புருஷனின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்தேன். அந்த மராட்டிய திலகத்தின் நற்கொடைகள் காலத்தால் அழியாதவை.மராட்டிய வம்சாவழியினர் தமிழகத்தின் ஒரு பகுதியில் செங்கோல் செலுத்தி இருக்கின்றனர். தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி இருக்கின்றனர். இன்றைக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஏடு ஆராய்ச்சித்துறையில் அதற்கான பழைய ஓலைச் சுவடிகள் பராமரிக்கப்படுகின்றன.எனவே வீர சிவாஜியின் வாழ்க்கைப் பயணம் என்பது மராட்டிய பூமிக்கு மட்டும் சொந்தமானதல்ல. அன்னைத் தமிழகத்திலும் அவரது வீச்சு இருந்தது; இருந்துகொண்டிருக்கிறது. ஆகையால் அவரது வரலாறு இன்றைய இளைய சமுதாயத்திற்குச் சொல்லப்பட வேண்டியது கட்டாயம்.சரஸ்வதி மஹாலும், சரபோஜி மன்னரும் தமிழ் உலகிற்குச் செய்துள்ள பணிகள் காலத்தையும் கடந்து நிற்பவை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நமது நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பார்த்தவர்கள் வீர சிவாஜியையும் சேர்த்தே நினைவு கொள்வர்.
சத்ரபதி சிவாஜி தமிழ்ச் சிந்தையோடு கலந்தவர். அவர் சென்னை வந்திருக்கிறார். காளிகாம்பாளை வணங்கியிருக்கிறார். .செஞ்சி சென்றிருக்கிறார். தேசிங்கு ராஜா கோட்டையைப் பாராட்டியிருக்கிறார்.