book

மாத்தா ஹரி

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகரத்தினம் கிருஷ்ணா
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :342
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788194919582
Out of Stock
Add to Alert List

"ஓர் அசலான நாவல் தனித்தன்மையோடு இருக்கும்: தனக்கென்று ஒரு முகவரியைக் கொண்டிருக்கும்: அப்போதுதான் அது இலக்கியமாகிறது. மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. நினைவில் எழுந்து அசைபோட வைக்கிறது. அதைப் பற்றிய வினாக்கள் எழுகின்றன; விடைகள் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஒரு சமயத்தில். கிடைத்த விடை சரியெனப்படுகிறது. பின்னால் சரியில்லை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட நாவல்தான் 'மாத்தா ஹரி -புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை.' நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது.ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது." - கி.அ. சச்சிதானந்தன்