book

எழுத்தின் தேடுதல் வேட்டை

Eluththin Theduthal Vettai

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகரத்தினம் கிருஷ்ணா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

"பிரெஞ்சு வார்த்தைக்குள்ளே விரியும் அர்த்தத்தின் மங்கலான நிழலுருவங்களைத் தொடர்ந்து சென்றுச் சிக்கெனப் பிடித்து தமிழ் வாசகப் பரப்புக்குள் கொண்டுவரும் சிரமமான பணியைத் தன்னாலான வகையில் எளிய முறையில் தன் எழுத்தின் மூலமாகத் தொடர்ந்து செய்து வருபவர் 'நாகி' என்று பிரியமாக அழைக்கப்படும் நாகரத்தினம் கிருஷ்ணா. நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு எழுத்தின் அல்லது இலக்கிய ஆசிரியனின் சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றுடன் அவன் அல்லது அவள் கொண்டிருந்த பகைத்தனமான அல்லது நட்பார்ந்த உறவுகளை எல்லாம் தன் கட்டுரைகள் முழுவதிலும் பேசிச் செல்கிறார். இக்கட்டுரைகளில் நாகரத்தினம் கிருஷ்ணா என்கிற எழுத்தாளருடன் சேர்ந்து, வாசகச் செயல்பாட்டில் பரவச நிலை அடைந்த வாசகக் களிப்புமிக்க ஒரு தீவிர வாசகரும் நம் கண் முன்னால் பிரசன்னமாகிறார். மர்மப்படுத்தப்பட்ட நாகரத்தினம் கிருஷ்ணனா என்கிற வாசகனின் முகமூடியைத் தனது கட்டுரைகளின் மூலமாக கழற்றி எறிகிறார் நாகரத்தினம் கிருஷ்ணா."