காதல் ரதியே!
Kadhal Rathiyae!
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபஸ்ரீ கிருஷ்ணவேணி
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :432
பதிப்பு :1
Published on :2009
Add to Cartதொடக்கத்தில் சாதாரண பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்ட ஆண், பெண் என்கிற பிரிவினை சமுதாய பழக்க வழக்கங்களினால் அனைத்து விஷயங்களிலும் தொடர்கிறது. 'ஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண்' என்ற பாரதியாரின் கருத்து வெறும் மேடை பேச்சாகவே இடம் பிடித்து விடுமோ என்ற ஐயம் அவ்வப்பொழுது எழத்தான் செய்கிறது. அறிவியல் வளர்ச்சி, உலக மயமாதல் என்று வளர்ந்து வரும் இந்தக் காலத்தில் கூட கிணற்றுத் தவளைகளாய் இருக்கும் பெண்கள் தான் நம் சமுதாயத்தில் பெரும்பான்மை வகையினர் என்பது கசப்பான உண்மை. இந்தக் கதையில் வரும் கதாநாயகன் சக்திவேல் மற்றும் கதாநாயகி ரேவதி பெற்றோர்களால் நடத்தி வைக்கும் கட்டாயத் திருமணத்தால் ஒன்று சேர்கின்றனர். உலக அறிவு எதுவுமில்லாத கிராமப்புறத்துப் பெண்ணான நாயகியை திருமணம் முடித்து வெளிநாட்டிற்கு உடன் அழைத்துச் செல்கிறான் நாயகன். சக்தி ரேவதியின் வளர்ச்சிக்கு அனைத்து விதத்திலும் உதவி செய்ய இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. ரேவதியின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் மெய்ப்பிக்கும் வகையில் சம்பவங்கள் நிகழ்கின்றன. 'ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆண் இருக்கிறான்' என்பதே கதையின் கரு. 'காதல் ரதியே' என்ற படைப்பில் இருக்கும் நிறை குறைகளைத் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: skv.sriveni@gmail.com இந்த எழுத்துப் படைப்பு அமைய சந்தர்ப்பம் அமைத்துத் தந்த உள்ளங்களுக்கும், வாசகர்களின் நன்றி. தடையின்றி ஊக்கமளித்த எங்களின் குடும்பத்தினருக்கும், ஈன்றெடுத்த பெற்றோர்க்கும், அன்பின் உறைவிடமான ஆச்சிக்கும் இந்தப் படைப்பு சமர்ப்பணம். உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,