book

நுண்ணுயிர் எதிரி (கொரோனா ஓர் சமூக - உளவியல் கண்ணோட்டம்)

Nunnuyir Ethiri (Koronaa Or Samooga - Ulaviyal Kannottam)

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :K. நித்தியானந்தன்
பதிப்பகம் :இனிய நந்தவனம் பதிப்பகம்
Publisher :Iniya Nandavanam Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788195306671
Add to Cart

நுண்ணுயிர் எதிரியான Covid -19 எனப்படும் கொரோனா வைரஸ் பற்றி அறிவதற்கு முன்பதாக மனிதர்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியும் விலங்குகளின் வாழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குகொள்ளும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகளைப் பற்றிய தெளிவைப் பெறுவது மிகவும் அவசியமானதாகும். நுண்ணுயிரிகள் என்பது என்ன ? நுண்ணுயிரிகளின் வகைகள் மற்றும் மனிதர், விலங்குகளினிடையே அவை ஏற்படுத்தும் பாதிப்புகள், விளைவுகள், நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளின் பின்ணணியில்கொரோனா வைரஸ்களின் ஆரம்பம், செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல் சிறந்ததாகவும், தெளிவான அறிவைப் பெறுவதற்கும் வழியமைக்கும். நுண்ணுயிர்கள் (Microorganism ) என்பது சாதாரணமாக கண்களுக்குத் தெரியாத புலப்படாத உயிரினங்களாகும். இவை குறிப்பாக மனிதனது வாழ்வு, கலாச்சாரம், ஆரோக்கியத்தில் பலவழிகளில் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கும், கழிவுப் பொருட்கள், கழிவுநீர் என்பவற்றை சுத்திகரிப்பதற்கும், எரிபொருள் உற்பத்தி, நொதிகள் (Enzymes ) ஆக்கத்திற்கும் மற்றும் உயிர்முனைப்புக் கொண்ட கலவைகள் (Bioactive Compound ) தயாரிப்பதற்கும் இவை உதவுகின்றன. உயிரியலில் நுண்ணுயிர்கள் மிகவும் அத்தியாவசியமான தேவையாகவும், அவை கருவிகளாகவும் திகழ்கின்றன. இன்றைய நவீன உலகில் நுண்ணுயிர் ஆயுதமாகவும் யுத்தகளத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மனிதகுலத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிரிகள் இன்றைய நவீன உலகில் உயிர்ப் பயங்கரவாதமாகவும் ( Bio-terrorism ) மாறிவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.