book

உடல் உறவும் உடல் நலமும்

Utal Uravum Utal Nalamum

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசனா இரா. ஆண்டியப்பன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :224
பதிப்பு :3
Published on :2011
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

இவ்வுலகில் ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழவே ஒவ்வொருவரும் விரும்புவது இயல்பு. சிலர் இயல்பான ஆரோக்கிய நிலையில் இருந்த போதிலும் பயம், கவலை, கோபம், பொறாமை ஆகியவற்றின் பாதிப்பினால் பிணிகளுக்குப் பலியாகிறார்கள். மேற்கண்டவற்றிலிருந்து விடுபட்டு, பூரணமாக உடல் நலத்தைப் பெறவும், உடலுறவில் முழுமையாக ஈடுபட்டு நல்லின்பம் பெற்று மகிழவும் சில யோகாசனங்கள் பெரும் அளவில் உதவுகின்றன. அனுபவத்தில் அனைவரும் மேற்கொள்ளக் கூடிய சாத்தியமான வழி முறைகளைத் தெளிவாகவும், விளக்கமாகவும், எளிமையாகவும் இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளேன். அனைவரும் இதனை நன்கு பயிற்சி செய்து பயன்பெறவும். உடல் உறவும் உடல் நலமும் -- நம்மையே நாம் அறிவோம். ஒருவர் ஏன் அடிக்கடி களைப்படைந்து சோர்வாகத் தென்படுகிறார். பொம்மை மாதிரி தன்னுடைய தினசரி காரியங் களில் சொந்த சக்தி இல்லாமல் ஈடுபடுகிறார். இரவு நித்திரைக்குப் போகும்பொழுது. காலையில் எழுந்திருக்கும் பொழுது உற்சாகத்துடன் எழுந்திருப்போம் என்ற நம்பிக்கையுடன் தன்னுடைய நித்திரையை, ஆரம்பிக்கிறார். ஆனால் மறுநாள் காலை வரும்பொழுது தன்னுடைய களைப்பு விட்டு விலகவில்லை. நன்றாகவே தூங்கியபோதிலும் தலை கனக்கிறது. குளிக்கும் அறைக்குப் போய் தன்னைக் கண்ணாடியில் பார்க்கிறார். கவலைப்பட்டு மருத்துவரைப் பார்க்கத் தீர்மானிக்கிறார். நரம்புக் கோளாறுகளால் கஷ்டம் என்றும் சில மருந்துகளைச் சாப்பிடும் படியாகவும் மருத்துவர் சொல்கிறார். மருத்துவர்சொன்ன விதிகளைப் பின்பற்ற கஷ்டப்படுகிறார். நமக்கு இப்பொழுது வயிற்றுக்கோளாறு இருப்பதாக உணர்கிறோம். பசியே இல்லை. தினமும் வேளா வேளைக்கு சாப்பிடுகிற உணவுகளை பிரியமில்லாமல் ஏதோ சாப்பிட வேண்டுமென்ற உணர்வினால் சாப்பிடுகிறோம்.